Site icon Tamil News

இன்னும் ஒரே ஒரு வெற்றி – வரலாறு படைக்க காத்திருக்கும் இந்திய அணி

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சுமார் 45 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இந்திய அணி தனது அடுத்த ஆக்சனை சென்னை மண்ணில் தொடங்க உள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதக்கூடிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. அணியின் தலைமை பயிற்சிளாக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

சென்னை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் வரலாற்று சாதனையை ஏற்படுத்தும். அதாவது இந்திய கிரிக்கெட் அணி 1932 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அடி எடுத்து வைத்தது. அன்றிலிருந்து இதுவரை இந்திய அணி 579 போட்டிகளில் விளையாடி தலா 178 போட்டிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது. 222 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

சென்னை மண்ணில் வங்கதேசத்தை இந்திய அணி வீழ்த்தினால் இந்தியா தனது 179 ஆவது வெற்றியை பதிவு செய்யும். அதாவது 1932 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணி டெஸ்டில் வெற்றியை விட தோல்வி அடைந்தது அதிகமாக இருந்து வந்தது. அந்த மோசமான ரெக்கார்டை சென்னை மண்ணில் உடைத்தெறிந்து 178 தோல்வி மற்றும் 179 வெற்றி என்ற நிலைக்கு இந்திய அணி உயரும்.

இந்த தருணத்தை இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வரும் 27 ஆம் தேதி தொடங்க உள்ளது.

முதல் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி –

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள்

Exit mobile version