Site icon Tamil News

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு? – பொது மக்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்களிடம் 46 பேர் 750,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்திருக்கின்றனர்.

Shopee இணைய விற்பனைத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி மோசடிக்காரர்கள் Whatsapp அல்லது Telegram மூலமாக முதலில் தகவல் அனுப்புவர்.

Shopee தளத்தில் தங்களுக்குப் பிடித்த பொருள்களைக் குறிப்பிடும்படி அவர்கள் கேட்பர். பிறகு ஆய்வில் பங்கேற்றால் ஒரு சிறிய தொகையைக் கொடுப்பதாகக் கூறுவர்.

ஆய்வில் பங்கேற்றதும். அதிகப் பணம் கிடைக்கும் உதவியாளர் வேலைக்கு வரும்படி அழைப்பு வரும்.

முதலில் கொஞ்சம் பணம் வரும். பிறகு கணக்கில் கூடுதல் பணம் போட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டப்பட்டுப் பணம் பறிக்கப்படும் என்று காவல்துறையும் Shopee Singapore நிறுவனமும் தெரிவித்தன.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டது.

Exit mobile version