Tamil News

ஆர்த்தி வீட்டுக்கு சென்ற காவல் துறை? பரபர தகவல்கள்

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

ரவி விவாகரத்து அறிவித்துவிட்டதால் பிரச்னை ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக காவல் நிலையத்தில் ஆர்த்தி மீது புகாரும் அளித்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ரவி வெளியிட்ட அறிக்கையில், தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர் எடுத்த முடிவு தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாது. அவரை சந்திக்கவே முடியவில்லை என்று சொல்லி ஆர்த்தி ஒரு குண்டை போட்டார்.

ஆனால் விவாகரத்தை பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்னரே ஆர்த்தியிடம் பேசினேன். அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பினேன் என்று ரவி சமீபத்தில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தன்னுடன் இணைத்து பேசப்படும் பாடகி கெனிஷா குறித்தும் பேசிய அவர், அந்தப் பெண்ணை இதில் இழுக்க வேண்டாம். அவர் ஒரு ஆதரவற்றவர். பலருக்கு உதவி செய்துவருகிறார். நானும் அவரும் சேர்ந்து ஒரு ஆன்மீக மையத்தை அமைக்கலாம் என்று இருக்கிறோம். வாழு வாழ விடு என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

‘ஆர்த்தியிடம் தனக்கு டைவர்ஸ் வேண்டுமென்று தெளிவாகவே சொல்லிவிட்டேன். ஒருகட்டத்தில் மூச்சு முட்ட ஆரம்பித்தது. அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது என்னிடம் ஒரே ஒரு கார் மட்டும்தான் இருந்தது. கையில் எதுவுமே இல்லை. மும்பையில் குடிபுகுந்தேன். அவ்வப்போது சென்னை வந்தேன். எனது மகனின் பிறந்தநாளுக்கு கடைசியாக வந்தேன். அவனிடமும் எனது விவாகரத்து பற்றி சொல்லிவிட்டேன்’என்றிருந்தார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டையும் ஆர்த்தியிடமிருந்து அவர் சமீபத்தில்தான் மீட்டார்.

இந்நிலையில் ஆர்த்தியிடமிருந்து தனது பாஸ்போர்ட், கார் உள்ளிட்ட உடைமைகளை மீட்டு தருமாறு ரவி நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ரவி அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்த்தியின் வீட்டுக்கு காவல் துறையினர் சென்று விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்போது ஆர்த்தி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அதேசமயம் கொஞ்சம் டல்லாகவே ரியாக்ட் செய்தார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

Exit mobile version