Tamil News

பதான் திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ள ஜவான் திரைப்படம் : வசூல் விபரம்!

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் உலகெங்கிலும் வெற்றிநடை போடுகிறது. அத்துடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்த திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

இதில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்த வசூல் அடிப்படையில் ஜவான்  673.75 கோடியையும், வெளிநாடுகளில் மொத்த வசூல் அடிப்படையில்  331.25 கோடியையும்  பெற்றுள்ளது.

இதன் மூலம், ஷாருக்கானின் முந்தைய படமான பதான் திரைப்படம் படைத்த சாதனையையும் முறியடித்துள்ளது.  ஜவான் வெளியான 19 நாட்களிலேயே ஆயிரம் கோடியை கடந்தது சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.

அத்துடன்  வங்கதேசத்தில் $1 மில்லியனை கடந்த முதல் பொலிவுட் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.  வளைகுடா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாகவும் ஜவான் திரைப்படம் உள்ளது.

Exit mobile version