Site icon Tamil News

ஜப்பானின் அடுத்த பிரதமரை உறுதி செய்யும் தேர்தல் இன்று!

ஜப்பானின் அடுத்த பிரதமரை உறுதிசெய்யும் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி, அதன் தலைமைத்துவத் தேர்தலை இன்று நடத்தவிருக்கிறது.

தொடர்மோசடிக் குற்றச்சாட்டுகளால் பிரதமர் புமியோ கிஷிடா (Fumio Kishida) பதவி விலகப்போவதாகக் கடந்த மாதம் அறிவித்தார்.

இம்முறை களத்தில் 9 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் பெண்களாகும். மூவர் முன்னணி வகிப்பதாகத் தேர்தல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஒருவர் ஷிஞ்சிரோ கொய்சுமி என்பவராகும். முன்னாள் சுற்றுப்புற அமைச்சரான அவர் முன்னாள் பிரதமரின் புதல்வராகும்.

அவர் வெற்றிபெற்றால், போருக்குப் பிந்திய ஜப்பானில் ஆக இளம் பிரதமராக அவர் இருப்பார். ஷிஞ்சிரோ கொய்சுமிக்கு வயது 43 ஆகும்.

இன்னொருவர் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா மற்றும் மூன்றாமவர் பொருளியல் பாதுகாப்பு அமைச்சர் சனே தகாய்ச்சி என்பவராகும்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட அடித்தள உறுப்பினர்களும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பர்.

Exit mobile version