Site icon Tamil News

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு..

இலங்கையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முதல் முறையாக நாளை திரிகோண மலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் களைக்கட்டும். இதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் விறுவிறுவென நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

தமிழ் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை இலங்கையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படவுள்ளது.

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் இந்த பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு தொடக்க விழாவாக நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் திரிகோணமலையில் குவிந்துள்ளனர்.

இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இலங்கைக்கு சென்றுள்ளனர்.

நாளை காலை 10 மணக்கு திரிகோணமலை சம்பூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் 200 காளைகளும் 100 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

Exit mobile version