Tamil News

தொட்டாலே மரணம் தான் … பிரித்தானியாவில் வளர்க்கப்படும் மிக ஆபத்தான தாவரம்!

உலகின் மிக ஆபத்தான தாவரம் ஒன்று தற்போது பிரித்தானியாவில் வளர்க்கபப்ட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த தாவரத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவில் நார்தம்பர்லேண்ட் பகுதியில் அமைந்துள்ள விஷப்பூங்காவில் Gympie-Gympie எனப்படும் அந்த ஆபத்தான தாவரம் வளர்க்கப்படுகிறது.தொடர்புடைய விஷப்பூங்காவில் வளர்க்கப்படும் தாவரங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று பார்வையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விஷப்பூங்காவில் இடம்பெற்றுள்ள Gympie-Gympie எனப்படும் அந்த ஆபத்தான தாவரம் பொதுவாக அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள மழைக்காடுகளில் காணப்படுகிறது.அந்த தாவரத்தின் முடியிழைக்கு ஒப்பான முட்கள் பட்டாலே, உடல் மொத்தம் நெருப்பில் விழுந்தது போன்ற வலி ஏற்படும் என பூங்கா நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும், அடுத்த 20 முதல் 30 நிமிடங்களில் அந்த வலி பல மடங்கு அதிகரிக்கும் எனவும், இது சில வாரங்கள் முதல் மாதங்கள் வரையில் நீடிக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

அதாவது, அந்த தாவரத்தை சில நொடி உரசினாலே போதும், உயிரைக் கொல்லும் வலி உறுதி என்கிறார்கள். மின்சாரம் பாய்ந்தவரின் உடல் தீப்பற்றிக் கொண்டால் என்னவாகும் அந்த நிலை, இந்த சில நொடி நேரத்தில் ஏற்பட்டுவிடும் என தெரிவித்துள்ளனர்.

1866ல் முதன்முறையான இந்த தாவரம் குறித்து ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். சாலை ஆய்வாளர் ஒருவரின் குதிரை இந்த தாவரத்தை தீண்டிய நிலையில், கடும் சித்திரவதை அனுபவித்து, இரண்டே மணி நேரத்தில் அந்த குதிரை இறந்துள்ளதாக கூறுகின்றனர்.மனிதர்களும் இந்த தாவரத்தால் பாதிக்கப்பட்டு, பல வாரங்கள் தூங்க முடியாமல், வலியால் அவஸ்தைகள் அனுபவித்ததாகவும் கூறுகின்றனர். இந்த தாவரத்தை தீண்டியதால், வலி தாங்க முடியாமல் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நார்தம்பர்லேண்ட் பகுதியில் அமைந்துள்ள விஷப்பூங்காவில் சுமார் 100 வகையான மிக ஆபத்தான தாவரங்கள் வளர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version