Site icon Tamil News

இத்தாலிய பிரதமரின் இராஜதந்திர ஆலோசகர் பதவி விலகல்

போலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டதால், தனது தலைமை இராஜதந்திர ஆலோசகர் ராஜினாமா செய்ததாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

“இந்த விஷயம் சரியாக கையாளப்படவில்லை, நாங்கள் அனைவரும் வருந்துகிறோம், தூதர் பிரான்செஸ்கோ டாலோ இதற்கு பொறுப்பேற்றார்,” என்று மெலோனி தெரிவித்துள்ளார்.

இத்தாலியப் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, ஒரு ஆப்பிரிக்கத் அரசியல்வாதியாக காட்டிக் கொண்ட ஒரு அழைப்பாளரிடம் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டது.

இது “தவறாக” அழைக்கப்பட்டதாக மெலோனியின் அலுவலகம் உறுதிப்படுத்திபடுத்தியுள்ளது.

உக்ரைனில் நடந்த போரில் “அதிக சோர்வு” இருப்பதாகவும், “ஒரு வழியைக் கண்டுபிடிப்பது” என்பது குறித்து தனக்கு சில யோசனைகள் இருப்பதாகவும் குறித்த தொலைபேசி அழைப்பில் இத்தாலியப் பிரதம மந்திரி கூறியுள்ளார்.

இத்தாலிய பத்திரிகைகளில் வந்த செய்திகளின்படி, அழைப்பாளர்கள் இரண்டு ரஷ்ய நகைச்சுவை நடிகர்கள், அவர்களில் ஒருவர் தன்னை மெலோனிக்கு “ஒரு ஆப்பிரிக்க அரசியல்வாதி” என்று காட்டினார் என செய்திகள் வெளியாகியதையடுத்து இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version