Tamil News

வெறும் 20 நிமிடத்தில் லியோ படைத்த சூப்பர் ஹிட் சாதனை!!

தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

தளபதி விஜய் அவர்கள் லியோ மற்றும் பார்தி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பார்தி என்ற கதாபாத்திரத்தின் மனைவியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.

மேலும் லியோ என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய்க்கு அண்ணனாக ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகிய இருவரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திலும் ஒரு காவல்துறை அதிகாரியாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஒரு சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லியோ திரைப்பட ட்ரெய்லர் வெளியான ஒரே நிமிடத்தில் ஒரு லட்சம் பேர் அதை லைக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல லியோ ட்ரெய்லர் வெளியான 20.5 நிமிடங்களில் அது 1 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக தளபதி விஜய் அவர்களின் பிகில் பட ட்ரைலர் 58 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குகள் பெற்றது தான் பெரும் சாதனையாக இருந்தது. இந்நிலையில் வெறும் 20 நிமிடத்தில் அந்த சாதனையை படைத்து சூப்பர் ஹிட் ட்ரைலராக மாறியுள்ளது லியோ திரைப்படம்.

Exit mobile version