Site icon Tamil News

ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தீவிர வான்வழி தாக்குதல்

ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாவின் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேலிய ராணுவம் செப்டம்பர் 23ஆம் திகதி மற்றொரு சுற்று விரிவான தாக்குதலை நடத்தியிருக்கிறது.போரின் இலக்குளை அடைய தரைவழித் தாக்குதலும் அவசியமாகும் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

காஸா போர் மூண்டதிலிருந்து ஒரு வருடகாலமாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து ஒரே சமயத்தில் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது பரவலான குண்டுவீச்சு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.

எல்லைகளில் கடுமையான துப்பாக்கிச் சண்டைகளுக்கு மத்தியில் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது.ராணுவம் மேல் விவரங்களை எதையும் வெளியிடவில்லை.இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி, தென் லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளிலிருந்து மக்கள் விலகியிருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இஸ்ரேலை தாக்குவதற்கான ஆயுதங்களை அடையாளம் கண்ட பிறகு லெபனானில் உள்ள ஹில்புல்லா இயக்கத்தின் இலக்குகளை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியதாக அவர் கூறினார்.லெபனானில் புகுந்து தரைவழித் தாக்குதல் மேற்கொள்ளப்படுமா என்று கேட்டதற்கு, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வோம் என்றார் ஹகாரி.

தெற்கு இஸ்ரேலில் ஹில்புல்லாவின் தாக்குதலால் வெளியேறிய மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை தேவையானவற்றை செய்வோம். இதுதான் இஸ்ரேலிய அரசாங்கத்தின் முன்னுரிமை என்று அவர் கூறினார்.

லெபனானின் தெற்கு எல்லையோரமாக உள்ள நகரங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தீவிர வான்வழி தாக்குதலை நடத்தின. செப்டம்பர் 23ஆம் திகதி காலை வடக்குப் பகுதிகளையும் இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை என்று ராய்ட்டர்சின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version