Site icon Tamil News

இஸ்ரேல் மிகப்பெரிய “மூலோபாயத் தவறு” செய்துள்ளது – ஈரான்

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததன் மூலம் இஸ்ரேல் மூலோபாய தவறு செய்துவிட்டது.

ஏனென்றால் இஸ்ரேல் அதற்கான மோசமான விலையை கொடுக்க இருக்கிறது என ஈரான் பொறுப்பு வெளியுறவுத்துறை மந்திரி அலி பகாரி தெரிவித்துள்ளார்.

சவுதி கடற்கரை நகரான ஜெட்டாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டதற்கு அடுத்த நாள் அலி பாகரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பதற்றம், போர் மற்றும் மற்ற நாடுகளுடன் மோதலை விரிவாக்கம் செய்ய இஸ்ரேல் விரும்புகிறது. எனினும் ஈரானுடன் போர் புரியும் நிலையில் இஸ்ரேல் இல்லை. அவர்களுக்கு அதற்கான திறனும் இல்லை. வலிமையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு இஸ்ரேல்தான் முழு பொறுப்பு என பிரகடனம் செய்தனர்.

இதற்கிடையே ஹிஸ்புல்லா ராணுவ கமாண்டர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

Exit mobile version