Site icon Tamil News

காஸா முழுவதும் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள இஸ்ரேல்!

இஸ்ரேல், காஸா முழுவதற்கும் தரைத் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காஸாவின் வடக்குப் பகுதியை அதன் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து பகுதிகளுக்கும் தரைத் தாக்குதலை விரிவுபடுத்துவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காஸாவின் 2ஆவது ஆகப் பெரிய நகரான தெற்கில் உள்ள கான் யூனிஸிற்குள் இஸ்ரேலின் கவச வாகனங்கள் நுழைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

போரில் இருந்து பாதுகாப்புப் பெறப் பொதுமக்கள் பலர் அந்த நகரில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.

ஹமாஸ் குழுவுக்கு எதிரான போரின் புதிய கட்டத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாக இஸ்ரேலியத் தற்காப்புப் படை கூறுகிறது.

அண்மையில் முடிவுக்கு வந்த சண்டைநிறுத்தத்துக்குப் பிறகு 800க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டதாகப் பாலஸ்தீனத் தரப்பு தெரிவித்தது.

Exit mobile version