Tamil News

மேற்குக் கரையில் இஸ்ரேல் தொடங்கும் பெரிய அளவிலான நடவடிக்கை

மேற்குக் கரையின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் படையினரால் குறைந்தது 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

அல்-ஃபர்’ஆ’ அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், ஜெனின் பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலிலும் ஆயுதமேந்திய சண்டைகளிலும் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

‘ஜெனின்’, ‘துல்கார்ம்’ நகரங்களில் பயங்கரவாதத்தை முறியடிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.அது மிகப் பெரிய இஸ்ரேலிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ‘ஜெனின்,’ ‘துல்கார்ம்’, ‘நப்லுஸ்’, ‘துபாஸ்’ எனக் குறைந்தது நான்கு பாலஸ்தீன நகரங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, 2000 முதல் 2005 வரை பாலஸ்தீனத்துக்கு எதிராகப் பெரிய அளவிலான புரட்சி நடத்தப்பட்டது. அப்போது இதுபோன்றே, சில பாலஸ்தீன நகரங்கள் ஒரே நேரத்தில் குறிவைக்கப்பட்டிருந்தன.அதனைத் தொடர்ந்து, இப்போது முதல் முறையாக அத்தகைய புரட்சி மேற்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது.

Israel launched large-scale operation in four West Bank cities

இந்நிலையில், ‘ஜெனின்’ நகரத்திற்குள் செல்வதற்கான முக்கியச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. அந்த நகரின் அகதிகள் முகாமில் ஆயுதமேந்திய சண்டைகள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.விடியற்காலையில், அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதோடு, ‘ஜெனின்’ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குள் இஸ்ரேலியப் படையினர் நுழைந்துள்ளதாகவும், ‘துல்கார்ம்’ நகரில் இரண்டை முடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.நப்லுஸ்’ நகரில் உள்ள இரண்டு அகதிகள் முகாம்களில் அவர்கள் கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.

‘துபாஸ்’ நகருக்கு அருகில் உள்ள ‘ஃபர்’ஆ’ முகாமில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்தோரைச் சென்றடைய அவசர மருத்துவ வாகனங்கள் சிரமப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, “இஸ்ரேலியத் பாதுகாப்புப் படையினர் ஈரானிய-இஸ்லாமிய பயங்கரவாதக் கட்டமைப்புகளை ஒழிக்க, ‘ஜெனின்’, ‘துல்கார்ம்’ நகரங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் நேற்றிரவிலிருந்து முழு பலத்துடன் செயல்பட்டு வருகின்றனர்,” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.

Exit mobile version