Tamil News

அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் … பத்திரிகையாளர் பலி!

வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இன்று இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரஃபாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் அடெல் ஜரோப் என்ற பத்திரிகையாளரும் உயிரிழந்தார்.

அதேபோல் ரஃபாவில் மூன்று குடியிருப்புகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. இதில், 29 பேர் பலியாகினர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த அக்டோபர் 7ம் திகதி தொடங்கியதிலிருந்து இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19,453 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் நடத்தும் கடும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச் சபையில் அண்மையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

Seven Palestinian reporters killed in Israel's Gaza strikes

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஆனால், போரை நிறுத்த வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறிவருகிறது.இதையடுத்து, “இந்தப் போரில் ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

அதற்கும் அசையாத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “போர் நிறுத்தத்துக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்தாலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும். யாராலும் எங்களைத் தடுக்க முடியாது” என்று கூறிவிட்டார். இந்த நிலையில்தான், இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

Exit mobile version