Site icon Tamil News

கொழும்பு – கோல்பேஸ் பகுதியில் உள்ள காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

கோல்பேஸ் அகல காணி ( போராட்டம் நடத்த அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இடம்) எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தை கசினோ வர்த்தகத்திற்கு குத்தகைக்கு விடுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  விஜித ஹேரத் தெரிவித்த கருத்து பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (22.02) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் செயற்படும் போது எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி நாசப்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க விதிகளுக்கு மாறாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version