Tamil News

தளபதி விஜய் சினிமாவில் இருந்து நீண்ட இடைவேளைக்கு திட்டமிடுகிறாரா? அப்போ ‘தளபதி 69’?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படம் முடியும் தருவாயில் உள்ளது.

இதற்கிடையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘தளபதி 69’ தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக, ‘தளபதி 69’ படத்தில் விஜய்யை இயக்க ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு பிளாக்பஸ்டர் தயாரிப்பாளரான அட்லீ மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

செப்டம்பர் 7 ஆம் திகதி ஜவான் வெளியான பிறகு 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தளபதி 69 க்கான முன் தயாரிப்புகளை அட்லீ தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் கேரியரில் இது மிகப்பெரிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் அதிகாரப்பூர்வமாக எவையும் வெளியாகவில்லை. சினிமாத்துறையில் உச்சத்தில் இருக்கும் தளபதி அந்த நீண்ட இடைவெளியை எடுக்கப் போவதில்லை என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version