Site icon Tamil News

கூகுள் செயற்கை நுண்ணறிவால் குழப்பமா.? விளக்கம் அளித்த முக்கிய அதிகாரி.!

கூகுள் செயற்கை நுண்ணறிவில் குழப்பமில்லை என்றும், பயனர்களின் சில வினாக்களுக்கு மட்டும் நையாண்டி கட்டுரைகளின் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் முன்னணியில் செல்ல கூகுள் நிறுவனமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது பயனர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் AI ஓவர்வியூ (Google AI Overview), அதன் செயல்பாட்டில் சில விமர்சனங்ளை எதிர்கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக, நேற்று ஓர் பயனர், கூகுள் ஏஐ-யிடம் உணவுபொருளான பிசாவில் சீஸ் ஓட்டவில்லை என கூறி அதற்கு தீர்வு கேட்டுள்ளார். அதற்கு, கூகுள், நச்சுத்தன்மையற்ற பசையை உபயோகிக்க கூறி ஆலோசனை கூறியுள்ளது. இந்த பதில் இணையத்தில் கூகுள் ஏஐ ஓவர்வியூ மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது.

இப்படியான பதில்கள் குறித்து தற்போது கூகுள் செய்தி தொடர்பாளர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், இப்படியான சில பதில்கள் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது என்றும், நகைச்சுவை தளமான தி ஆனியன் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் இந்த பதில்களை கூகுள் ஓவர்வியூ பயனர்களுக்கு அளித்துள்ளது என்றும் கூறினார்.

மேலும், கூகுள் ஏஐ நன்றாக வேலை செய்வதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சில மிகவும் அரிதான வினாக்கள் மட்டுமே பொதுவான பயனர்கள் எதிர்பார்க்கும் பதில்களை தருவதில்லை என்றும் கூறியுள்ளது. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு கூகுள் ஏஐ இணையத்தில் ஆழமாக தேடுவதற்கு கூடுதல் இணைப்புகளுடன் அதிக தகவலை வழங்குகின்றன என்றும் கூகுள் கூறியுள்ளது. இருந்தும் , கூகுள் ஏஐ ஓவர்வியூவில், உள்ள சில கொள்கை மீறல்கள் கண்டறியப்பட்டு அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version