Site icon Tamil News

ஜப்பானுக்கு சொந்தமான தீவை குறிவைக்கிறதா சீனா : போர்கப்பல்களை அனுப்பியதால் பரபரப்பு!

ஜப்பானிற்கு சொந்தமான கடல் வழியாக சீன கப்பல்கள் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த நடவடிக்கை பல வாரங்களாக நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் போர்க்கப்பல்கள் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு அருகில் சமீப நாட்களில் வந்து செல்வதாகவும் ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழனன்று நான்கு சீனக் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளின் எல்லைக்கு வெளியே கடந்து சென்றதாக பெய்ஜிங் கூறியுள்ளது.

ஜப்பானிய மொழியில் சென்காகு என்று அழைக்கப்படும் தீவுகளை மேலும் நெருங்குவதற்கு எதிராக சீனாவின் கப்பல்களை ஜப்பான் எச்சரித்துள்ளது. ஆனால் குறித்த பகுதியை பெய்ஜிங் டியோயு என்று அழைக்கிறது.

சீனாவின் கடலோரக் காவல்படை செவ்வாயன்று தைவானால் உரிமை கொண்டாடப்படும் தியோயு தீவுகளுக்கு அப்பால் ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டது.

ஜப்பான் கடலோரக் காவல்படை கமாண்டன்ட் ஷோஹெய் இஷி, ஜப்பானிய கடல் எல்லைக்குள் சீன கடலோரக் காவல்படையின் செயல்பாடு சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், “நிலைமை மிகவும் தீவிரமானது மற்றும் கணிக்க முடியாதது” என்றும் கடந்த மாதம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version