Site icon Tamil News

சனல் 4 பொய்களின் திணிப்பா?

உயிர்த்த ஞாயிறு கொலை தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல் நாட்டை உலுக்கிப்போட்டிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் அதுபற்றி பேசவைத்திருக்கிறது. அச்செய்தி. எல்லா அரசில் வாதிகளையும் நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. யார்மீது என்ன குற்றச்சாட்டு வந்துவிடுமோ ? யார் யார் தங்களை அறியாமல் சம்மந்தப்பட்டிருப்போமோ என்று தம்மை தாமே சந்தேகப்படும் அளவுக்கு சனல் 4 செய்தி அரசியல் தலைமைகளை புரட்டிப்போட்டிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம், மூட்டியிருக்கும் தீ

1 ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவா இடம்பெற்றது
2 தாக்குதல் சம்பவத்தோடு உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்களா ?
3 ஆட்சி கவிழ்ப்புக்காகவா சதி திட்டம் இடம் பெற்றதா ?
4 பிள்ளையனுக்கும் சம்பவத:தக்கும் என்ன தொடர்பு
5 சர்வதேச விசாரணை அவசியமா ?,
6. தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படுவார்களா?

என்ற பல கேள்விகளையும், சந்தேகங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது சனல் 4 காணொளி.

2015 ஆம் ஆண்டு, ராஜபக்ஷ ஆட்சி வீழ்த்தப்பட்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது . யுத்த வெற்றி காரணமாக 30 வருடங்களுக்கு எம்மை அசைக்க முடியாது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு இது ஒரு பேரிடியாக மாறியது. இவ்வாறானதொரு நிலையில்தான் அரசி;யல் புரட்சி அல்லது சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியை கைப்பற்ற ராஜபக்ஷ குடும்பம் தீட்டிய திட்டத்தின் சதியே 2019 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இ.டம் பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் என கூறப்பட்டது.

மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதன் கொடூரமாக வெளி நாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களி; 95 வீதமானவர்கள் தமிழர்கள். இந்த சம்பவத்தின் பின்னணியின் சூத்திரதாரிகள் யார்? என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில்தான் பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல் 4 குறித்த காணொளியை கடந்த 5.9.2023 ஆம் திதி ஒளிபரப்ப செய்துள்ளது. இது கோடை காலம் என்பது போல் ஜெனிவா மனிதவரிமைப்பேரவை கூட்டப்படவிருக்கும் இக்காலத்தில் கடந்த காலங்கள்போல் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. எனக்கூறி சில அரசியல் தலைவர்கள் உண்மைளை மூடி மறைக்கப்பார்க்கிறார்கள்.

மேற்படி காணொளி கூறும் கதை என்ன என்று பார்ப்பின், தென்னிலங்கை தலைமைகளான ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான அதிகாரிகள், அரசியல் வாதிகள் மற்றும் சிலர் உடந்தையாக இருந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினரை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்காக இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான மேஜர் ஜெனரல் சலே என்பவர் சில இஸ்லாமிய அமைப்புக்களுடன் கூட்டுச்சேர்ந்து ஒரு சதித்திட்டம் தீட்டியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதற்கு ஆதாரமாக 2018 ஆம் ஆண்டு மேற்படி சதியாளர்கள் இத்திட்டம் தொடர்பில் ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறார்கள் என தெரிவித்திருக்கும் சனல் 4 இச்சந்திப்பின் உடன் நடவடிக்கையாக சுரேஷ் சலே என்ற புலனாய்வு அதிகாரி என்னிடம் வந்து ராஜபக்ஷ குடும்பத்திருக்கு உடனடித்தேவையாக இருப்பது இலங்கையில் ஒரு பாதுகாப்பற்ற சூழல்.

அப்போதுதான் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆவதற்கு வழி பிறக்கமென்று தன்னிடம் கூறியதாக ஆசாத் மௌலானா என்பவர் தங்களிடம் வாக்கு மூலமாக தெரிவித்திருப்பதாக சனல் 4 காணொளி வெளியிட்டுள்ளது. அது மட்டுமன்றி ஆசாத் மௌலானா குண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஐயத:;துக்கு இடமின்றி, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் ஆகியோரிடமும் ஆசாத் மௌலானா உண்மைகளை வெளிப்பத்திள்ளார் என சனல் 4 தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆசாத் சாலி யார் என்பது பற்றி தெரிந்து கொள்வதயின் பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் கிழக்கு மாகண முதலமைச்சர்(2008—2012) சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆஸ்தான வித்துவான் அதாவது பிள்ளையானின் ஊடக செயாளராகவும் நிதி முகாமையாளராகவும், இருந்த பிரகிருதி. இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் விவசாய பட்டத்தைப்பெற்றவர். ஆங்கிலம் தமிழ் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சியுள்ளவர். அரசியல் போதிப்பதில் வல்லவர்,

இந்த காணொளியைத் தொடர்ந்து பல ஆச்சரியமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிற.து. ராஜபக்ஷக்களை அதிகாரத்துக்கு கொண்டுவரும் நோக்கிலையே இந்த தாக்குதல் இடம் பெற்றிருக்கவேண்டு மென்று தான் சந்தேகப்படுவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்கவின் புதல்வி அஹிம்சா விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதலின் பின்னணியில் கோத்தா இருப்பார் என்றும் தான் சந்தேகப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்னொரு புறத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவி;ன் ஆதரவாளர்களான முன்னாள் கிழுக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் அவரது குழுவினரும் தாக்குதலின்பின்னணியில் சூத்திரதாரிகளாக இருக்கிறார்கள் என மறை முகமாகவும் சிலர் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்துரைத்த, முன்னாள் மதலமைச்சர் பிள்ளையான் தாக்கதல் தொடர்பில் தற்கொலை தாரிகளை தூண்டியவர்கள் சில மதநிறுவனங்கள் , அரசியல் வாதிகள், சர்வதேச சக்திகள் பின்னணி வகித்த தாகவும் அவர்களை காப்பாற்றவே ஆசாத் மௌலாவை மந்திரம்போட்டு அழைத்துள்ளார்கள் என்றும் அரசியல் தஞ்சம் கோருவதற்காகவே இப்படி பொய்யான தகவலை சாட்சியாக ஆசாத் மௌலான கூறியுள்ளார் என சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஆசாத் மௌலான தனது வாக்குப்பதிவில் ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மறை முகமாக பல பிரயத்தனங்களை சுரேஸ் சலே செய்தார் என்றும் ராஜபக்ஸ கடும்பத்துக்கு பிரதி உபகாரம் செய்யும் வகையிலையே தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சம்பவம் இடம் பெற்ற ஒரு சில மாதங்களிலையே பதவி ஏற்ற ஜனாதிபதி கோத்தபாய சுரேஸ் சலேவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தலைவராக நியமித்தார் என்றும் இது அவர் செய்த சதிக்கு பிரதி உபகாரமாகவே வழங்கப்பட்டதாக ஆசாத் மௌலான தனது வாக்குப்பதிவில் தெரிவித்துள்ளார். சுரேஸ் சலே ஏலவே பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சியின் ஆதரவாளராகவும் இராணுவ புலனாய்வுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார் என்றும் தனது வாக்கு மூலத்தில் ஆசாத் மௌலான தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படு கொலையோடு சம்மந்தப்பட்டவர் என்ற சந்தேத்தின் பேரில் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருந்த பிள்ளையான் ஒருநாள் தன்னை சந்திக்கும்படி தொலை பேசியில் அழைத்ததாகவும் சிறைக்கு சென்ற வேளை தான் கடும்போக்காளர் பலரை அங்கு சந்தித்ததாகவும் சிறை அதிகாரிகள் தன் முன்னே ஒரு கறுத்த உருவங்கொண்ட ஒருவரை அழைத்துவந்து அறிமுகம் செய்ததாகவும் அவரே சைனி மௌலி ஆவார் என்றும் உயிர்த்த ஞாயிறு தாக்கதலுடன் சம்மந்தப்பட்டவரென அறிமுகம் செய்து வைத்ததாக மௌலான தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அயல்நாட்டவர் யாரும் விசாரணைக்காக அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று வீராப்பு பேசிக்கொண்டவர்கள் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியி;ல் இருக்கும் சூத்திரதாரிகள் யார் அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் இதை உள்நாட்டு விசாரணையாளர்களோ ஆணைக்குழுக்களோ புலனாய்வுப்பிரிவினரோ கண்டு செய்யப்போவதில்லை எனவே சர்வதேச விசாரணையை நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டதன்காரணமாகவே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரியபோதும் கடந்த நான்கு வருடங்களாக கோரி வந்தபோதும், விசாரணைகள் நடைபெறாத நிலையில் அவர் சர்வதேச விசாரணையை நாடவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார். ஐ.நாடு மனிதவுரிமைப் பேரவைக்கு சென்று அவர் நியாயம் கேட்டிருந்தார்.

அதே பேராயர்தான் தற்போது சனல் 4 வெளியிட்ட தகவலை அடுத்து குண்டுதாக்குதல்களின் பின்னணியி;;ல் இருந்ததாக கூறப்படுகின்ற நபர்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைக்குழு ஒன்றின் மூலமாக விசாரிக்கப்படவேண்டும் என்ற பகிரங்க கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

இவரைப்போலவே எதிர்க்கட்சி தலைவரான சஜித்பிரேமதாஸ நடந்த சம்பவங்களுக்கு நாம் வெட்கப்படவேண்டும். சர்வதேச விசாரணைகள் அவசியமானது. என்று அரசை கோரியுள்ளார். அதேபோல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ் நாணயக்கார ஆகியோர் சர்வதேச விசாரணை வேண்டுமென்று கூறியிருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

சரண் அடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதாவும், மனிதவுரிமை மீறல்கள் இடம் பெற்றதாகவும் பல்வேறு ஆதாரங்களை இத்தொலைக்காட்சி கடந்த காலங்களி; வெளியிட்டிருந்தது.; அதை இலங்கை அரசாங்கம் மறுத்தது சர்வதேச விசாரணைகள் நடத்துங்கள் என தமிழர் தரப்பினராலும,; புலம்பெயர் அமைப்புக்களாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் இறையாண்மை கொண்ட நாட்டுக்குள் அன்னிய நாட்டு விசாரணையாளர்களை அனுமதிக்கமாட்டோமென சண்டித்தனம் பேசினார்கள்.

மனிதவுரிமை மீறல்கள் யுத்த குற்றம ஆகியவைதொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளிகளி;ல் உண்மைத்தன்மையில்லை பொய்யாக சோடிக்கப்பட்ட காட்சிகள் என்று யார் யார் கூறினார்களோ அவர்கள் இன்றும் அதே பல்லவியைத்தான்பாடுகிறார்கள்.

சனல் 4 கடந்த செவ்வாய்க்கிழமை (5.9.2023) வெளியிட்ட இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் வெளிப்படுத்தல்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட காணொளியில் உண்மைத்தன்மையில்லை. பொய்யானது. ராஜபக்ஷ குடும்பத்தை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டவை. மனிதவுரிமை பேரவை ஆரம்பமாகும் ஒவ்வொரு காலப்பகுதியிலும் இத்தகைய சாகஷங்கள் நடைபெறுவது வழமை என அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கூறி தம்மை தப்ப வைக்கப்பார்க்கிறார்கள். என்பது அவர்கள்மீதான விமர்சனம்.

திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி செய்த காலத்தில் (1960—1965) சில ராணுவ அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் இணைந்து சதிப்புரட்சி செய்து ஆட்சியை கவிழ்க்க எடுத்த முயற்சி தற்செயலாக அறியப்பட்டு முறையடிக்கப்பட்டதுபோல் நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்த சதி முயற்சி யொன்று திட்டமிடப்பட்டிருக்கிறது. என்றும் பண்டார நாயக்கா கொலையில் எவ்வாறு புத்த பிக்குகள் விலைப்பட்டார்களோ அதேபோல் அதே பாணியில் பலர் விலைபோய் உள்ளனர் என்றும் தெரிவிக்ப்படுகிறது.

முன்னாள் கிழக்கு மாகாண முதமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய பிள்ளையான் கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் சிறை அதிகாரிகள், சௌனி மௌலி ஆகியோர் தாக்குதல் சம்பவத்தோடு தெடர்பு பட்டிருக்கிறார்கள இதில் பிரதான பாத்திரவாளியாக கருதப்படுபவர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை பலர் மறுத்தும் உள்ளனர்.

இந்த சுரேஷ் சாலே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளராக இராணுவ புலனாய்வுத்துறை பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்றும் சனல் 4 ஆதாரம் காட்டி சில செய்திகள் வெளிவந்துள்ளன. ஆகவே இங்கு தமிழ் மக்கள் விடுதபை;புலிகளின் ஊடகப்பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா பொறுப்பு வகித்ததாக கருதப்படும் சுரேஷ் சாலே தற்போது குற்றவாளிக்கூண்டில் நிறுதப்பட்டிருக்கிறார். இவரே அனைத்தின் மூலதாரியென மௌலனா தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.

ஆனால் இந்த செய்திகளை திசை திருப்பிவிடும் நோக்கில் சன் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்ட பின்னணியி;ல் புலம் பெயர் அமைப்புக்கள் செயற்பட்டுள்ளதாக தென்னிலங்கை பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தமிழ்பேரவை உள்ளிட்ட புலம் பெயர் அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அந்தப்பத்திரிகை மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரை காப்பாற்றும் வகையிலும் புலம் பெயர் அமைப்புக்களை சாடும் வகையிலும் இச்செய்தியை திரித்து வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது மிக திட்ட மிட்ட முறையில் பாரி வலைப்பின்னல்களோடு மேற்கொள்ளப்பட்ட படு கொலைகள் என்பது வெளியிடப்பட்ட காணொளியால் மட்டுமல்ல வெளிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தகவல்கள் செய்திகள் அனைத்தாலுமே உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியப்படுத்தப்படுகிறது. பேராயர் மல்கம் அவர்கள் குறிப்பிட்டதுபோல் சம்பவம் நடந்து நான்கு வருடங்களுக்கு மெலாகியும் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. சூத்திரதாரிகள் கண்டறியப்படவில்லை இது நாட்டுக்கும் பாதுகாப்புத்துறைக்குப் பெருத்த அவமானத்தை உண்டாக்கியிருக்கும் ஈன மென்பதை சகலரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த சம்பவ உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்கு இரசாங்கமும் அதிகாரிகளும் பின் நிற்பதற்கு காரணம் பல்வேறு ரகசியங்களும் உண்மைகளும் வெளிவந்துவிடுமென்ற பயமே காரணமாக இருக்கலாம். எது எப்படி இருப்பினும் மேற்குறித்த தாக்குதலில் 269 அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெளிநாட்டவரின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தினால் மத அனுட்டானங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஊறு விளைவிக்ப்பட்டிருக்கிறது;

குறித்த ஒரு மதத்தை இலக்குவைத்து செய்யப்பட்ட இந்த மிலேச்சத்தனமான கொடுமைக்கு தகுந்த பரிகாரம் காணப்படவேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும். சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் வரலாறு வருத்த்படும் அளவுக்கு தண்டனை வழங்கப்படவேண்டுமென்பதே அனைத்து மக்களும் எதிர்பார்க்கம்விடயமகும்.

நன்றி – திருமலை நவம்

Exit mobile version