Site icon Tamil News

பிரித்தானிய வான்வெளியில் ஈரான் விமானங்களுக்கு தடை

ரஷ்யாவுக்கு மிக ஆபத்தான ஏவுகணைகளை விற்பனை செய்யும் காரணத்தால் ஈரான் விமானங்களுக்கு பிரித்தானிய வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கையால் உக்ரைன் – ரஷ்ய போர் மிக ஆபத்தான கட்டத்திற்கு நகரும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் David Lammy குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே ஈரானிய விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மட்டுமின்றி, ஜேர்மனியும் பிரான்சும் இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ளது. ஈரானுடனான இருதரப்பு விமான சேவை நடவடிக்கைகளை ரத்து செய்யவும் முடிவெடுத்துள்ளது.

இதனால் ஈரானிய விமானங்கள் இனி ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் வான்வெளியை பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும்.

தற்போது ஒவ்வொரு வாரமும் இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் இடையே நேரடி ஈரான் ஏர் விமானங்கள் உள்ளன, ஆனால் அவை நிறுத்தப்படுவதற்கு 12 மாதங்கள் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

‘ரஷ்யா இப்போது ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்துள்ளது மற்றும் வாரங்களுக்குள் அவற்றைப் பயன்படுத்தும்” என செவ்வாயன்று அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரி Antony Blinken கசிந்த உளவுத்துறையை உறுதிப்படுத்தினார்,

Exit mobile version