Site icon Tamil News

IPL Qualifier 02 – இறுதி போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும் ஐதராபாத்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 34 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல துக்கம் கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கேட்மோர் 10 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன சஞ்சு சாம்சனும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரியான் பராக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ரனக்ளை சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். மறுபுறம் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது.

ஐதராபாத் சார்பில் ஷாபாஸ் அகமது மூன்று விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த வகையில், மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி பெற்றது. 2024 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

Exit mobile version