Site icon Tamil News

IPL Match 67 – பூரான் அதிரடி : மும்பை அணிக்கு 215 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் – படிக்கல் களமிறங்கினர்.

படிக்கல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 28 ரன்னிலும் ஹூடா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து கேஎல் ராகுலுடன் பூரன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய பூரன் 19 பந்தில் அரை சதம் கடந்தார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அர்ஷத் கான் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார்.

இவர் போன போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து ஓவரில் கேஎல் ராகுல் 55 ரன்களுடன் வெளியேறினார்.

69 ரன்னில் 3-வது விக்கெட்டை இழந்த லக்னோ அணி 178 ரன்னில் 4-வது விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்த 1 ரன்னை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் பதோனி மற்றும் குர்ணால் பாண்ட்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.

மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Exit mobile version