Site icon Tamil News

IPL Match 22 – முதல் தோல்வியை பதிவு செய்த கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சால்ட் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இருந்தாலும் அதன்பிறகு சுனில் நரைன் – அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.

அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ரச்சின் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மிட்செல் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

நிதானமாக விளையாடிய மிட்செல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே அவரது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 28 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்ததாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோனி களமிறங்கினார். ஆனால் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Exit mobile version