Site icon Tamil News

IPL Match 09 – டெல்லி அணிக்கு 186 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.

இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

இதன் காரணமாக ராஜஸ்தான் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. இதன் பிறகு ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ரியான் பராக் நிதானமாக ஆடினார்.

அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த ஜூரெல் 12 பந்துகளில் 20 ரன்களை குவித்தார்.

போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர். 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

Exit mobile version