Site icon Tamil News

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – கிளப் வசந்த தொடர்பில் மருத்துவமனை வெளியிட்ட தகவல்

அதுருகிரியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெலியஅத்த, கதிர்காமம் மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களைச் சேர்ந்த பலர் அடங்குகின்றனர்.

குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் குறுகிய காலத்திற்குள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிளப் வசந்தாவின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றது.

மூளையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கிளப் வசந்த உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கிளப் வசந்தா மீது 20 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அவரது உடலில் இருந்து எட்டு தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு, கிளப் வசந்தாவின் உடலை அவரது மூத்த மகன் ஏற்றுக்கொண்டார்.

கிளப் வசந்தாவின் சடலம் பொரலலையில் உள்ள தனியார் மரண இல்லத்திற்கு பிற்பகல் 02:30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது.

அத்துரிகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்தா மற்றும் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த கிளப் வசந்தாவின் மனைவி, பாடகர் கே.சுஜீவா உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே சுஜீவா மற்றும் மற்றுமொருவர் அத்துருகிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Exit mobile version