Site icon Tamil News

உலகின் பணக்காரர்கள் அதிகம் செல்லும் நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் அதிகம் செல்லும் நாடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Henley Private Wealth Migration Report எனும் அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஆசியாவுக்கு இடம்பெயர்ந்து செல்ல விரும்பும் பணக்காரர்கள் சிங்கப்பூரை அதிகம் விரும்புகின்றனர். இவ்வாண்டு பல மில்லியன் மதிப்புடைய சொத்து வைத்திருக்கும் 3,500க்கும் அதிகமானோர் சிங்கப்பூருக்கு வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

பணக்காரர்கள் அதிகம் செல்லும் நாடுகளின் தரவரிசையில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் முதலிடம் வந்தது. தொடர்ந்து 3ஆம் ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இவ்வாண்டு 6,700 பணக்காரர்கள் அங்குச் செல்வார்கள் என்று எண்ணப்படுகிறது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அந்நிய முதலீட்டாளர்களையும் திறனாளர்களையும் ஈர்க்க “கோல்டன் விசா” (golden visa) எனும் திட்டத்தை வைத்துள்ளது.

தரவரிசையின் 2ஆம் இடத்தில் அமெரிக்கா வந்தது. அங்கு இவ்வாண்டு 3,800 பணக்காரர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியுரிமைத் திட்டங்களையொட்டி அரசாங்கங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஆலோசனை வழங்கும் Henley and Partners நிறுவனம் தரவரிசையை உருவாக்கியது.

தரவரிசையில் இடம்பெற்ற முதல் 10 நாடுகள்

1. ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்
2. அமெரிக்கா
3. சிங்கப்பூர்
4. கனடா
5. ஆஸ்திரேலியா
6. இத்தாலி
7. சுவிட்சர்லந்து
8. கிரீஸ்
9. போர்ச்சுகல்
10. ஜப்பான்

Exit mobile version