Site icon Tamil News

காஸாவில் உள்ள 17 இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் காஸா பகுதியில் சிக்கியுள்ள 17 இலங்கையர்களைக் கொண்ட குழு, போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதியை விட்டு வெளியேறி ரஃபா எல்லைக் கடவை வழியாக எகிப்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அந்த வகையில், இவர்களில் 15 இலங்கையர்கள் இன்று பிற்பகல் எகிப்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக SLBFE ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் இன்று (02.11) அறிவித்துள்ளார்.

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகமும், பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கையின் பிரதிநிதி அலுவலகமும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

அக்டோபர் தொடக்கத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடையத் தொடங்கியதில் இருந்து காயமடைந்த பாலஸ்தீனியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் புதன்கிழமை (நவம்பர் 01) முதல் முறையாக காசாவில் இருந்து எகிப்துக்கு வரத் தொடங்கினர்.

Exit mobile version