Site icon Tamil News

ஜெர்மனியில் இரட்டை குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனி நாட்டில் இரட்டை குடியுரிமை பெறுவது விரைவாக்கப்படுகின்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெர்மனி பாராளுமன்றத்தில் டுபோ ஷாட் வோகர் ஷொப் கெசட் என்று சொல்லப்படுகின்ற கடுகதி பிரஜா உரிமை சட்டமானது நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் 5 வருடங்களில் பிரஜா உரிமை பெறுகின்ற சட்டங்கள் அமுலில் இருக்கின்றது.

அதன் காரணத்தினால் ஜெர்மனியும் அவ்வாறான மிக வேகமான முறையில் ஜெர்மன் பிரஜா உரிமையை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் பல மில்லியன் கணக்கானவர்கள் வெளிநாட்டு பிரஜா உரிமையை வைத்து இருப்பதாகவும்,

கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு ஜேர்மன் பிரஜா உரிமையை பெற்றவர்கள் மொத்த வெளிநாட்டு சனத்தொகையில் 3.1 சதவீதமாக உள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய மற்றைய நாடுகளானது ஜெர்மன் நாடு போல் அல்லாது அந்த நாட்டு பிரஜா உரிமையை எடுக்கின்ற எண்ணிக்கையானது கூடுதலாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் கனடாவில் 3 வருடங்களில் பிரஜா உரிமையை எடுக்க முடியும் என்றும் இந்த சட்டம் தொடர்பான தகவல் முன்பே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்குது.

Exit mobile version