Site icon Tamil News

சிங்கப்பூரில் தொழில் பெற முயற்சிப்பவர்களுக்கு வெளியான தகவல்

சிங்கப்பூரில் தொழில் வழங்கும் போது அனுபவம், திறன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வதாகக் கூடுதலான முதலாளிகள் கூறுகின்றனர்.

வேலைக்கு ஆள் சேர்க்கும்போது கல்வித்தகுதி அவசியம் என்றபோதும் இவற்றினை கருத்திற் கொள்வது பொருத்தமானது.

மனிதவள அமைச்சு வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிக்கை அதைப் புலப்படுத்துவதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் உதவித் தலைமைச் செயலாளர் Patrick Tay, Facebookஇல் பதிவிட்டார்.

கல்வித்தகுதி எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்தாலும் தகுந்த அனுபவமும் திறனும் இருந்தால் ஊழியர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று 68 சதவீத முதலாளிகள் சொல்வதாக அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் வேலையின்மையையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் எதிர்கொள்ளத் திறன் மேம்பாடு அவசியம் என Patrick Tay குறிப்பிட்டுள்ளார்.

மாற்றங்களைச் சந்திக்க ஊழியர்கள் புதிய திறன்களுடன் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்கம், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் முத்தரப்பினருக்கும் இதில் முக்கியப் பங்கிருக்கிறது என்று Patrick Tay கூறினார்.

Exit mobile version