Site icon Tamil News

போப் பிரான்சிஸ்க்கு உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்

86 வயதான போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று போப் பிரான்சிஸ், ஐரோப்பிய மதகுருக்களுடனான சந்திப்பிற்காக தயார் செய்யப்பட்ட உரையைப் படிப்பதைத் தவிர்த்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.

“காலை வணக்கம். உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், உங்களை வரவேற்கிறேன், இந்த வருகைக்கு நன்றி, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது, இதனால் நான் உரையைப் படிக்காமல் நகலை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன்.” அவர் அவர்களிடம் கூறியுள்ளார்.

.

Exit mobile version