Site icon Tamil News

ஆசியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்துக்கள் பற்றி வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்குள் ஆசிய நாடுகளில் உள்ள 10 பணக்காரர்களின் நிகர மதிப்பை புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 2024ஆம் ஆண்டுக்குள் ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 102.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பது மும்பையில் உள்ள ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும்.

அதன் வணிகங்களில் ஆற்றல், பெட்ரோலியம், இரசாயனங்கள், இயற்கை எரிவாயு, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு, வெகுஜன ஊடகம் மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும்.

இந்தோனேசிய புகையிலை அதிபர் ராபர்ட் புடி ஹார்டோனோ 2024 ஆம் ஆண்டுக்குள் ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 44.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.

ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் உரிமையாளரான ஷபூர் மிஸ்திரி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இவரது சொத்து மதிப்பு 32.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஷபூர்ஜி பல்லோன்ஜி, கட்டுமானம், ரியல் எஸ்டேட், ஜவுளி, பொறியியல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய நிறுவனமாகும்.

Exit mobile version