Site icon Tamil News

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியான தகவல்

ஜெர்மனியில் 11 மில்லியன் மக்கள் பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றார்கள் என்று தெரியவந்துள்ளது.

49 யூரோ பயண அட்டையானது கடந்த முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தற்பொழுது இந்த பயண அட்டையானது ஒரு வருடத்துக்கு மேலாக பாவணைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் மொத்தமாக 11 மில்லியன் மக்கள் பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றார்கள்.

மேலும் 15 மில்லியன் மக்கள் இந்த டொஷ்லான் டிக்கடை பயன்படுத்தினால் மட்டுமே இலாபத்தை ஏற்படுத்தும் என்று புள்ளி விபரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 49 யூரோ பயண அட்டை அமுலுக்கு வந்த பின் 8 சதவீதமான மேலதிக பயண அட்டைகள் விற்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையானது தொடர்ந்து நடைபெற்றால் இது இலாபகரமான நடவடிக்கையாக அமையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலை வழங்குகின்றவர்கள் தங்களது தொழிலாளர்களுக்கு ஜொப் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற வேலை செய்கின்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயண அட்டைகளை கொள்வனவு செய்வதற்கு உத்வேகத்தை அளிப்பதன் மூலம் இவ்வகையாக 15 மில்லியன் இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கிடையே இந்த பயண அட்டை தொடர்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகின்மை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version