Site icon Tamil News

ஜெர்மனியில் உதவி பணத்தில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென புதிய புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு மொத்தமாக 1.8 மில்லியன் சிறுவர்கள் சமூக உதவி பணத்தில் வாழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் சனத்தொகையில் 80.3 மில்லியனாக 2010 இல் காணப்பட்டும் பொழுது , தற்பொழுது 84.7 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு 13.1 மில்லியனாக காணப்பட்ட தொகையானது பின்னர் 13.3 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவர்கள், சிரியா நாட்டை சேர்ந்த சிறுவர்கள் மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுவர்கள் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் நாட்டு சிறுவர்களில் 262000 பேர் சமூக உதவி பணத்தில் வாழ்வதாகவும், சிரியா நாட்டை சேர்ந்தவர்களில் 131000 சிறுவர்கள் சமூக உதவி பணத்தில் வாழ்கின்றது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் 80000 சிறுவர்கள் சமூக உதவி பணத்தில் வாழுவதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜெர்மனிய நாட்டை சேர்ந்த சிறுவர்கள் சமூக உதவி பணத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கையானது குறைந்து காணப்படுவதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version