Site icon Tamil News

INDvsSA T20 – மழையால் போட்டி நிறுத்தம்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 3வது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 2வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் டக் அவுட்டானார்.

3வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 29 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ரிங்கு சிங் யாதவுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர்.

சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்த நிலையில் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜிதேஷ் ஷர்மா ஒரு ரன்னில் வெளியேறினார். ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

இறுதியில், இந்தியா 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. ரிங்கு சிங் 68 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார்.

19.3 ஓவர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் மலை குறிக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version