Tamil News

மாமியாருக்கு கிஸ் குடுத்தா தப்பா? அப்பாக்கு கிஸ் குடுத்தா தப்பா?

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் படி படுகோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணம் ஆட்டம் பாட்டத்துடன் நடந்து கொண்டிருந்த போது மாப்பிள்ளை ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் முத்தமிடும் போட்டோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு இந்திரஜா பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

இந்திரஜா மற்றும் கார்த்திக்கின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரியங்கா தனது மருமகனுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த போது, மாப்பிள்ளை ரோபோ ஷங்கரின் மனைவிக்கு முதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.

இது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அக்காவுக்கு இப்படி முத்தம் கொடுக்கலாமா என்றும் இது அநாகரீகம் என கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திரஜா தனது நிச்சயதார்த்தத்தின் போது, தனது அப்பா ரோபோ ஷங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுத்து இருந்தார். இதுவும் அப்போது சர்ச்சையானது.

அதற்கு பதில் அளித்துள்ள இந்திரஜா, என் அப்பாவுக்கு முத்தம் கொடுத்த போட்டோவை பார்த்த பலர், அப்படி அப்பாவுக்கு தரலாமா என விமர்சித்தார்கள். அவர் என் அப்பா, நான் பிறந்ததில் இருந்தே அவருக்கு இப்படித்தான் முத்தம் கொடுத்து விளையாடி இருக்கிறேன்.

வளர்ந்துவிட்டால் நான் மகள் இல்லை என்று ஆகிவிடுமா? நான் முத்தம் கொடுத்ததில் தவறு இல்லை, அதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களின் கண்ணில் தான் பிரச்சனை, உங்களை உங்க அம்மா தப்பா வளர்த்து இருக்கிறார்கள்.

நான் தப்பானவ இல்லை, என்னை அப்பா சரியாக வளர்த்து இருக்கிறார் என்று கூறியிருந்தார். இரண்டு முத்த சர்ச்சைக்கும் இதுதான் பதில் என்பது போல நெட்டிசன்கள் தற்போது இந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

Exit mobile version