Tamil News

இந்தோ. மோட்டார் வண்டிகளில் சுற்றும் காதல் ஜோடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம்!

உலகில் அதிகரித்த இஸ்லாமிய மக்கள் வாழும் பிரதேசங்களில் ஒன்றாக இந்தோனேசியா -சுமாத்ரா தீவின் மேற்கு மூலையில் ஆச்சே எனும் மாகாணம் விளங்குகின்றது.

உலகில் கட்டுக்கோப்பான இஸ்லாமிய சட்டதிட்டங்களைப் பேணும் பிரபலமான பிராந்தியமாக ஆச்சே மாகாணம் இன்றளவும் பின்பற்றுகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.இங்கு ஆண் ,பெண் வாகனப் பயணங்கள் தனித்தனியாக அமைய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாகாணத்தில் தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்குவது பல்வேறு சட்டங்கள் அமுலில் இருக்கின்றன.சூதாட்டம், மது அருந்துவது, திருமணத்துக்கு அப்பாலான உறவு உள்ளிட்டவை இவற்றில் சேரும்.

Young and in love in Indonesia? Beware, in Banda Aceh the sharia police are  watching | The Independent | The Independent

இந்த வரிசையில் தற்போது திருமணம் மற்றும் குடும்ப உறவுக்குள் வராத ஆண் – பெண் ஆகியோர் ஒன்றாக வாகனப் பயணம் செய்வதற்கான தடையும் சேர்ந்திருக்கிறது.தங்களது வாகனப் பயணங்களை ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே மேற்கொள்ள வேண்டும்.இதன் மூலம் வாகனங்களில் செல்லும் ஜோடிகளை கட்டுப்படுத்த இயலும் என ஆச்சே மாகாணம் முடிவெடுத்துள்ளது.

இஸ்லாமிய மதகுருக்களின் பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version