Site icon Tamil News

கனடாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்திரா காந்தி படுகொலை விவகாரம் : கடுமையான கண்டம் வெளியிட்டுள்ள இந்தியா!

கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றில்  இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு  காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இது சம்பந்தமான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், சர்ச்சை எழுந்தது.  படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில்  வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் பெரிய விவகாரம் தொடர்பில் இருக்கும் என நான் நினைக்கிறேன். யார் வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய,  வாக்கு வங்கி அரசியலுக்கான தேவையை கடந்து  நாம் புரிந்துகொள்ள தவறிய விஷயம் என்னவென்றால், பிரிவினைவாதிகள்,  பயங்கரவாதிகள்,  வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய விவகாரம் இதில் மறைந்துள்ளது.

இது உறவுகளுக்கு நல்லதல்ல என நான் நினைக்கிறேன். கனடாவுக்கும் நல்லதல்ல. கனடாவில் நடந்த ஏதோ ஒரு விஷயம் என்றில்லாமல் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று என தெரிவித்துள்ளார். கனடாவின் செயலுக்கு இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரன் மெக்கேவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Exit mobile version