Tamil News

‘கிராமி’ விருதை தங்கள் வசமாக்கிய இந்தியாவின் சக்தி இசைக்குழு!

பிரபல இசை விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருது இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘கிராமி’ விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும். 1951ம் ஆண்டு முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடமி (National Academy of Recording Arts & Sciences) வழங்குகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 66-வது ‘கிராமி’ விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்ற ஆல்பத்திற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Grammy 2024 winner Shakti: 5 things you need to know about Zakir Hussain's  band - Hindustan Times

சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் சக்தி இசைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கிராமி’ விருது கிடைத்தது.

இந்த விருது நிகழ்வில் பாடகர் சங்கர் மகாதேவன்,” எனது குழு, கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார். இசையமைப்பாளர் செல்வகணேஷ் ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘துரோகி’, ‘நில் கவனி செல்லாதே’,’குள்ளநரிக் கூட்டம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version