Site icon Tamil News

வரலாற்று சாதனை படைத்த இந்தியா : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்தியா எல்-01!

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு இந்தியா தனது அடுத்த முயற்சியாக சூரியனை இலக்கு வைத்துள்ளது.

இதன்படி ஆதித்தியா  L1  விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.50 இற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

4.5 ஆண்டுகள் பழமையான நட்சத்திரமான சூரியனை நெருங்க 04 மாதங்கள் எடுக்கும் எனக் கூறப்படுவதுடன், சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் தற்போது பூமியில் நிலவும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களை கண்டறிய முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் இந்த முயற்சி வெற்றிபெரும் பட்சத்தில் சூரியனை ஆய்வு செய்த முதல் நாடாக இந்தியா வரலாற்றில் இடம்பிடிக்கும்.

Exit mobile version