Site icon Tamil News

இந்திய மகளிர் அணி தலைவருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை

வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

அவரது இந்த செயல்பாடுகள் ஐசிசி விதிகளை மீறும் செயல் என்பதால் அவர் அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி சம்பளத்தில் 75 சதவீதத்தை அபராதமாக செலுத்தவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்திய கேப்டன் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், எமிரேட்ஸ் ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்கள் குழுவின் அக்தர் அகமது முன்மொழிந்த தடைகளை ஏற்க ஒப்புக்கொண்டார். எனவே அவர் மீது முறையான விசாரணை தேவையில்லை, தண்டனைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன” என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

Exit mobile version