Tamil News

புகழ்பெற்ற ஹனோவர் லாட்ஜ் மாளிகையை 1200 கோடிக்கு வாங்கிய இந்தியர்!

லண்டனில் சுமார் ரூ.1200 கோடி மதிப்புள்ள சொகுசு மாளிகை ஒன்றை இந்தியாவை சேர்ந்த ரவி ரூயா என்ற கோடீஸ்வரர் வாங்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானிய தலைநகர் லண்டனில் பிரம்மாண்ட சொகுசு வீடுகளுக்கான சந்தை அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் முதலீட்டு நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரவி ரூயா, லண்டனில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

Billionaire Ravi Ruia buys ₹1,190 crore Hanover Lodge mansion in London:  Report | Mint

1827ம் ஆண்டு கட்டப்பட்டு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த ஹனோவர் லாட்ஜ் மாளிகை லண்டனின் 150 பார்க் சாலை அமைந்துள்ளது.ரவி ரூயா இந்த மாளிகையை ரஷ்ய முதலீட்டாளரான ஆண்டிரி கோஞ்சரென்கோவிடமிருந்து வாங்கியுள்ளார்.

ஆண்டிரி கோஞ்சரென்கோ கடந்த 2012ம் ஆண்டு இந்த மாளிகையை சுமார் 120 மில்லியன் பவுண்டுக்கு வாங்கி இருந்தார்.ரஷ்ய அரசு நிறுவனமான காஸ்ப்ரோம் இன்வென்ஸ்ட் யூக் நிறுவனத்தில் ஆண்டிரி கோஞ்சரென்கோ முன்னாள் துணை தலைமை செயல் அதிகாரி ஆவார்.

Exit mobile version