Site icon Tamil News

பிரித்தானியாவில் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இந்தியர் – 18 ஆண்டு சிறை

பிரித்தானியாவில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்திய நாட்டவர் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரகு சிங்கமனேனி என்ற 50 வயதுடைய வடக்கு லண்டனின் இஸ்லிங்டன் ஹாலோவே ரோடு, வூட் கிரீனின் ஹை ரோடு ஆகிய இடங்களில் மசாஜ் நிலையம் நடத்தி வருகிறார்.

இவர் தனது மசாஜ் பார்லரில் 17 முதல் 23 வயது வரையிலான நிறைய இளம் பெண்களை பணியில் சேர்த்துள்ளார்.

அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் ரகு சிங்கமனேனிக்கு எதிராக வூட் கிரீன் கிரவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பான விசாரணையில் ரகு சிங்கமனேனி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வூட் கிரீன் கிரவுன் நீதிமன்றம், ரகு சிங்கமனேனிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

பாலியல் வழக்கில் இந்திய இளைஞருக்கு 7 ஆண்டு சிறை இதேபோல், பிரித்தானியாவில் சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி இளைஞரான ப்ரீத் விகலுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4ம் திகதி 20 வயது இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை தோளில் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வௌியானது.

இதுதொடர்பான விசாரணையில், அந்த பெண்ணுடன் நடந்த இன்ஸ்டாகிராம் கருத்து பதிவுகளின் அடிப்படையில் ப்ரீத் விகல் அடையாளம் காணப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து ப்ரீத் விகலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேல்ஸ் மாகாண நீதிமன்றம்

Exit mobile version