Site icon Tamil News

53 மில்லியன் ரூபாய் மோசடி செய்த இந்திய பிரஜை டெக்சாஸில் கைது!

கொவிட் நிவாரண நிதிதிட்டத்தில் 53 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொற்றுநோய் பதிலளிப்பு பொறுப்புக் குழு (PRAC) மேற்கொண்ட விசாரணைகளுக்கு ஏற்ப அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட நிதித் திட்டமான Paycheck Protection Program (PPP) திட்டத்தில் இருந்தும் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் 53 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் ஓக்லஹோமா பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version