Tamil News

இந்தியன் 2: அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானது.. ஆனால் முக்கியமானது மட்டும் மிஸ்ஸிங்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படமும் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகவில்லை.

லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து உருவாக்கி உள்ள இந்த படம் தேர்தலுக்கு முன்பு வரவில்லை என்றாலும், தேர்தலுக்கு முன்னர் அதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என நினைத்து ஊழல் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்கிற அறிவிப்புடன் இன்று படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், எந்த தேதியில் வெளியாகும் என்பதை இன்னமும் படக்குழு அறிவிக்காதது ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

ஆனால், சோஷியல் மீடியா மற்றும் சினிமா வட்டாரத்தில் இந்தியன் படம் வரும் ஜூன் 13ம் தேதி தான் வெளியாகிறது என்கிற தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது.

ஜூன் மாதம் ரிலீஸ் என அறிவித்துள்ள நிலையில், ஜூன் 13ம் தேதி சரியான ரிலீஸ் தேதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியன் படம் கொடுத்த எஃபெக்ட்டை இந்தியன் 2 படம் கொடுக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இதை விட பெரிய சம்பவம் செய்யும் எனக் கூறுகின்றனர்.

Exit mobile version