Site icon Tamil News

ஜிம்பாப்வே அணியிடம் படுதோல்வியை சந்தித்து இந்தியா

2024 டி20 உலக சாம்பியனான இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்று (06) வெற்றி பெற்றது.

இந்தியாவை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே றெ்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில்  நாணய சுழற்சியில் வென்ற இந்தியா, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.

கிளைவ் மடாண்டே 29 ஓட்டங்களையும், டியான் மியர்ஸ் 23 ஓட்டங்களையும், பிரையன் பென்னட் 22 புஓட்டங்களையும், வெஸ்லி மாதேவெரே 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ரவி பிஷ்னோய் 04 விக்கெட்டுக்களையும், வொஷிங்டன் சுந்தர் 02 விக்கெட்டுக்களையும், அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்கு முன்னால் முற்றிலும் நிர்க்கதியாகி 19 ஓவர்கள் 05 பந்துகளில் 102 ஓட்டங்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.

கேப்டன் ஷுப்மான் கில் 31 ஓட்டங்களையும், வாஷிங்டன் சுந்தர் 27 ஓட்டங்களையும், அவேஷ் கான் 16 ஓட்டங்களையும் எடுத்தனர், வேறு எந்த வீரரும் 10 ஓட்டங்களை எட்ட முடியவில்லை.

டெண்டாய் சதாரா மற்றும் சிக்கந்தர் ராசா தலா 03 விக்கெட்டுகளையும், பிரையன் பென்னட், வெலிங்டன் மசகட்சா, பிளெஸிங் முசரபானி மற்றும் லூக் ஜோங்வே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Exit mobile version