Site icon Tamil News

சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்ய இந்தியா தயாராகி வருகின்றது

சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்ய இந்தியா தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மழையின்மையால் கரும்பு சாகுபடி பாதித்ததால் இந்தியாவில் கரும்பு அறுவடை குறைந்ததே கரும்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் தமது சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா தடை செய்தால், 07 வருடங்களில் முதல் முறையாக சர்க்கரை ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கைக்கு சீனியை இறக்குமதி செய்யும் பிரதான நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

Exit mobile version