Tamil News

இந்தியா- கனடா இடையேயான மோதலுக்கு முற்றும்புள்ளி;மீண்டும் விசா சேவை தொடக்கம்

இந்தியா – கனடா விசா சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. நான்கு பிரிவுகளுக்கான விசா சேவை மட்டும் இன்று தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா – கனடா இடையேயான உறவில் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ.

மேலும் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் இந்தியா மீது குற்றம்சாட்டி பேசினார். ஹர்தீப் சிங் கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதுதொடர்பாக உலக நாடுகளின் ஆதரவையும் கோரினார் ட்ரூடோ. ஜஸ்டீன் ட்ரூடோவின் இந்த நடவடிக்கைகளால் கடுப்பான இந்திய அரசு குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு கண்டனமும் தெரிவித்தது.

India resumes visa services in Canada for select categories amid diplomatic  row | India News - The Indian Express

இதையடுத்து கனடாவில் இருந்த இந்திய தூதரை வெளியேற்றியது அந்நாட்டு அரசு. இதற்கு பதிலடியாக கனடா தூதர்களை வெளியேற உத்தரவிட்டது மத்திய அரசு, கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தது. மேலும் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறும் உத்தரவிட்டது.

இதையடுத்து துதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது கனடா. இந்த மோதல் காரணமாக கடந்த மாதம் 21ம் திகதி முதல் கனடாவுக்கான விசா சேவையை நிறுத்தி அதிரடி காட்டியது இந்தியா. பாதுகாப்பு காரணங்களால் விசா சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

இதனால் கனடாவில் இருந்து இந்தியா வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் விசா வழங்கும் சேவையை தொடங்க வேண்டும் என்று கனடா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் மருத்துவ விசா, பிஸ்னஸ் விசா, என்ட்ரி விசா, கான்பரன்ஸ் விசா ஆகிய 4 விசா சேவைகள் தொடங்கியது. இதனால் இந்தியா வர காத்திருந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version