Site icon Tamil News

உலகக்கோப்பைக்கான இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அறிவிப்பு

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட குழுவை இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி:-

1. ரோகித் சர்மா 2. சுப்மன் கில் 3. விராட் கோலி 4. ஸ்ரேயாஸ் அய்யர் 5. ஹர்திக் பாண்ட்யா 6. ஜடேஜா 7.கே.எல்.ராகுல் 8. குல்தீப் யாதவ் 9. முகமது சமி 10. முகமது சிராஜ் 11. பும்ரா 12. ஷர்துல் தாகூர் 13. சூர்யகுமார் யாதவ் 14. இஷான் கிஷன் 15. அக்சர் படேல்

உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணி:-

1. டெம்பா பவுமா (கேப்டன்) 2. ஜெரால்ட் கோட்ஸி 3. குயின்டன் டி காக் 4. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 5. மார்கோ ஜான்சன் 6. ஹென்ரிச் கிளாசென் 7. சிசண்டா மகலா 8.கேசவ் மஹராஜ் 9. ஐடன் மார்க்ரம் 10. டேவிட் மில்லர் 11. லுங்கி என்கிடி 12. அன்ரிச் நார்ட்ஜே 13. தப்ராஸ் ரபஹாம் 14. டாகிசோ ரபஹாம் 15. ராஸ்ஸி வான் டெர் டுசென்.

Exit mobile version