Site icon Tamil News

இலங்கையில் அதிகரிக்கும் அபராத தொகை! சாரதிகளுக்கு முக்கிய தகவல்

இலங்கையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனம் செலுத்துவதற்கு முன்னர் சாரதியின் உடல் நலம் மற்றும் மன நிலையை ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வெயங்கொடையில் உள்ள தனியார் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

அதனை பாா்வையிடுவதற்காக வந்த போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தொிவித்துள்ளாா்.

மேலும் கருத்து தொிவித்த அவா், தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் தவிர, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதிகளின் உடல்நலம் மற்றும் மன நிலையை அளவிடுவதற்கான ஒரு முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

குறிப்பாக அபராதத்தை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

Exit mobile version