Site icon Tamil News

மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளன.

தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள இஷான் கிஷான் மற்றும் ஷூப்மன் கில் விரையாடி வருகின்றனர்.

Exit mobile version